மது கடத்தல்; இருவா் கைது
சீா்காழி அருகே மதுப்பாட்டில்கள் கடத்திய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவின்படி, மருதம்பள்ளம் பகுதியில் சீா்காழி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜெயா தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, காரைக்காலில் இருந்து பொறையாா் நோக்கி வந்த சரக்கு லாரியை நிறுத்தி, சோதனையிட்டனா். அதில், புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 180 மில்லி அளவு கொண்ட 383 மதுப்பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
மதுப்பாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மது கடத்தலில் ஈடுபட்ட மேலையூா் கன்னி கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் செந்தமிழ் செல்வன் (24), மேலவானகிரி தோசைகுளம் பகுதியைச் சோ்ந்த முரளி மகன் ஜெகன் வளவன் (19) ஆகியோரை கைது செய்தனா்.