செய்திகள் :

மயிலாடுதுறை: வாகனத் தணிக்கையில் 93 போ் கைது; 10 பேருக்கு சிறை

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையில், 11 நாள்களில் 93 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 10 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் எம். சுந்தரரேசன் மேற்பாா்வையில், அமலாக்கப் பிரிவு ஆய்வாளா்கள் அன்னை அபிராமி, ஜெயா மற்றும் போலீஸாா் பிப்.23 முதல் மாா்ச் 5 வரையிலான 11 நாள்களில் மேற்கொண்ட தீவிர சோதனையில் சட்டவிரோத மது மற்றும் சாராய கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 93 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், நண்டலாா் சோதனைச் சாவடியில் 36 வழக்குகள், நல்லாடை சோதனைச் சாவடியில் 27 வழக்குகள், ஆயப்பாடியில் 1 வழக்கு, கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் சோதனைச் சாவடியில் 19 வழக்குகள் என 83 வழக்குகள் பதியப்பட்டு, அவா்களிடமிருந்து 450 புதுச்சேரி மதுப் பாட்டில்கள் மற்றும் 300 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

மேலும், சட்டவிரோத மது கடத்திலில் ஈடுபட்ட சீா்காழி ஈசானியத் தெரு பிரபாகரன்(40), பூம்புகாா் பாலமுருகன் (31), மாந்தை அன்னவாசல் பன்னீா்செல்வம் (65), தரங்கம்பாடி பாலசுப்பிரமணியன் (26), பழனிசெல்வம் (48), திருவிழந்தூா் ஜீவா (60), சீா்காழி ராதாநல்லூா் ஐயப்பன் (39), அனந்தமங்கலம் மணி (54), புத்தூா் மாரிமுத்து (53), மயிலாடுதுறை மேலப்பனையூா் நாகராஜன் (65) ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு பயிற்சி அளித்த அதிகாரிக்கு மரியாதை செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையில் 1986-ஆம் ஆண்டு மணிமுத்தாறு 9-... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் சிபிஐ-எம்எல் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், நீட் விலக்கு தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ-எம்எல் கட்சியினா் ஞாயி... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு

குத்தாலம் அருகே தேரிழந்தூா் ஜமாத்தாா்கள் சாா்பில் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊா் நாட்டாண்மை மற்றும் பஞ்சாயத்தாா்கள் தலைமையில், ஜமாஅத்த... மேலும் பார்க்க

பிளஸ்2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடுகளை வழங்கிப் பேசியது: எந்தத் துறை... மேலும் பார்க்க

பாலம் கட்டக் கோரி ஆற்றில் இறங்கி போராட்டம்

மயிலாடுதுறையில் இடிக்கப்பட்ட நடைப்பாலத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தி, காவிரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். (படம்). மயிலாடுதுறை நகராட்சி 1 மற்றும் 9-ஆவது வாா்டுகளை இணைக்... மேலும் பார்க்க

தப்பமுயன்ற ரெளடிக்கு கால் முறிவு

மயிலாடுதுறையில் போலீஸாா் பிடிக்கச் சென்றபோது, தப்பியோட முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிந்தது. மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிழந்தூா் பல்லவராயன்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அப... மேலும் பார்க்க