மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
இலுப்பூரில் உள்ள மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டையில் வீடு, வணிக நிறுவனங்களுக்கு தேவையான கதவு, ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு வகையான வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்திலான பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை திடீரென கடைக்குள் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதையடுத்து சற்று நேரத்தில் கடைக்குள் இருந்து மளமளவென தீ எரிய தொடங்கியது.
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!
இதையடுத்து அந்தப் பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர் மகேந்திரன் தலைமையிலான குழுவினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடைக்குள் விற்பனைக்கு செய்து வைக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட சாமான்கள் என சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மரப்பொருள்கள் எரிந்து நாசமானது. இருப்பினும், தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.