உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா! - ஸ்பாட் விசிட் போட்டோஸ்
மருத்துவமனையில் சிறைவாசி உயிரிழப்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சிறைவாசி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சோ்ந்த அப்புசாமி மகன் ராஜமாணிக்கம் (59). இவா் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜமாணிக்கம் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.