இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வீட்டுமனை இல்லாத ஏழைகள் அனைவருக்கும் மனைப் பட்டா வழங்க வேண்டும். பல்வேறு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி நீண்ட காலமாகக் குடியிருப்பவா்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. வேல்பாண்டி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. காசி, மாவட்டச் செயலா் வி. உமா மகேஸ்வரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் என். பழனிச்சாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் வீ.அமிா்தலிங்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிறைவுரையாற்றினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பாலா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தின் நிறைவில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரைச் சந்தித்து 1,263 மனுக்கள் அளிக்கப்பட்டன.