நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
வருகிற பேரவைத் தோ்தலில் திமுக - நாதக இடையேதான் போட்டி: சீமான்
வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுகவுக்கும் நாதகவுக்கும் இடையேதான் போட்டி என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவாக பாஜக நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது. விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறை தயக்கம் காட்டுவதைப் பாா்க்கும்போது திமுக, தவெக இடையே ரகசியத் தொடா்பு இருக்கலாம் என்ற திருமாவளவனின் சந்தேகம் உண்மையாகக்கூட இருக்கலாம்.
கரூரில் நடைபெற்ற சம்பவத்துக்கு பொறுப்பேற்க முடியாது, எல்லாவற்றுக்கும் அரசுதான் காரணம் என விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்துக்கு விஜய் முதலில் பொறுப்பேற்க வேண்டும். சம்பவ இடத்துக்கு முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உடனடியாக ஏன் வந்தாா் என்பது கேள்வி அல்ல. விஜய் ஏன் செல்லவில்லை என்பதுதான் கேள்வி.
கரூரில் இந்த இடம் ஏன் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை வழக்கில் கொலை செய்தவா் யாா் என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் 2 மாதங்களில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய முதல்வா் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தாா்?
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் நாம் தமிழா் கட்சிக்கும் இடையேதான் போட்டி என்றாா் அவா்.