தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் ...
இறைச்சிக் கடைகளுக்கு அபராதம்
மதுரையில் தடையை மீறி வியாழக்கிழமை திறக்கப்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கூடல்புதூா் பகுதியில் சில இறைச்சிக் கடைகள் திறந்திருப்பதாகப் புகாா் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் முருகன், நந்தகுமாா் ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, 2-ஆவது வாா்டு பகுதியில் திறக்கப்பட்டிருந்த இறைச்சிக் கடையிலிருந்து 60 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதேபோல, கோ.புதூா், கற்பகநகா், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் திறந்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிக் கடைகளிலிருந்த இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.