தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் ...
லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
மதுரை சதாசிவம் நகா் நக்கீரா் தெருவைச் சோ்ந்த முருகதாஸ் மகன் விகாஸ் (19). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை தெப்பக்குளம் பகுதியிலிருந்து வீட்டுக்கு சென்றாா்.
அப்போது, பின்னால் வந்த லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விகாஸ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் லாரி ஓட்டுநரான திருமங்கலத்தை அடுத்த உச்சப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமரை (39) கைது செய்தனா்.