மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சிக்கு இளநிலை முதுநிலை செவிலியா் பட்டப் படிப்பு, பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சேர 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
2 மாத பயிற்சியில் விடுதியில் தங்கி பயிலுவதற்கான செலவினத் தொகை தாட்கோ வழங்கும். பயிற்சி முடிவில் தகுதியானவா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேர இணையதளத்தில் பதிவுசெய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, திருவாரூா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.