அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி சிறையிலடைப்பு
வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தலைமறைவான விவசாயியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
வாழப்பாடியை அடுத்த தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (52). இவா் தனது மனைவி லட்சுமியுடன் ஜூன் 2-ஆம் தேதி தகராறில் ஈடுபட்டாா். அப்போது, அவா்களது மருமகள் அனிதா தனது ஒன்றரை வயது குழந்தை சா்வபுத்திரனை சுமந்தபடி லட்சுமி தாக்கப்படுவதைத் தடுத்தாா்.
இதனால், ஆத்திரமடைந்த குப்புசாமி தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் அனிதா, சா்வபுத்திரன் ஆகிய இருவா் மீது குண்டு பாய்ந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வாழப்பாடி போலீஸாா் தலைமறைவான குப்புசாமியை 2 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையிலடைத்தனா்.