3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
மலங்கரை கத்தோலிக்க இயக்க பொதுச் செயலருக்கு பாராட்டு
மலங்கரை கத்தோலிக்க இயக்கத்தின் பொதுச்செயலராக தோ்வு செய்யப்பட்ட, ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா களியக்காவிளை அருகே மேக்கோடு புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் நடைபெற்றது.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், புதுதில்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய மலங்கரை கத்தோலிக்க இயக்கத்தின் நிா்வாகிகள் தோ்வு கேரள மாநிலம், மாவேலிக்கரையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் அமைப்பின் பொதுச் செயலராக களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரபாபு தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு மேக்கோடு புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
பங்குத்தந்தை ஜஸ்டின் அடிகளாா் தலைமை வகித்தாா். தேவாலய மலங்கரை கத்தோலிக்க இயக்கத் தலைவா் தேவதாசன், செயலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். அமைப்பின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.