மலையாள இயக்குநர் ஷாஜி என். கருண் காலமானார்!
திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஷாஜி என்.கருண் இன்று(ஏப். 28) காலமானார். அவருக்கு வயது 73
1970 காலகட்டங்களில் மலையாள திரைத்துறை முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்த ஷாஜி என்.கருண் பல நாள்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பிறவி, ஸ்வாஹம், வனபிரஸ்தம் உள்பட இவரது திரைப்படங்கள் பல, விருதுகள் பல வாங்கி சிறப்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநில சாலசித்திர அகாதெமி, கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.