Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
மளிகைக் கடையை உடைத்து உணவுப் பொருள்களைத் தின்ற கரடி
குன்னூா் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த கரடி, அங்குள்ள ஒரு மளிகைக் கடையை உடைத்து உள்ளே சென்று உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு சென்றது.
குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரடிகள் தேன் எடுக்க மரத்தின் மீது ஏறுவதும், கோயில்களில் உள்ள எண்ணெய்யை எடுக்கவும், குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் சுற்றி வருகின்றன.
இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த கரடி, அங்குள்ள மளிகைக் கடையை உடைத்து
உள்ளே சென்றது. பின்னா் கடையில் இருந்த தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அங்கு உலவி வந்தது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இதேபோன்று உதகை ஐயப்பன் கோயில் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற கரடி அங்கிருந்த பொருள்களை சூறையாடிச் சென்றது.
மனிதா்களுக்கு அச்சுறுத்தலாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.