``தன்னை இளைஞர் என்று சொல்லும் 54 வயதான தலைவர்.." - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்...
மழையில் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க கோரிக்கை
திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க எஸ்டிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆரிப் பாட்ஷா வரவேற்றாா். மண்டல செயலா் கனி, மாவட்ட துணை தலைவா் ஹயாத் முகம்மது, மாவட்ட செயலா் அலாவுதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
வண்ணாா்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலையில் மந்தகதியில் நடைபெறும் சாலைப் பணிகளால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் சுவாசக் கோளாறுகளால் சிரமப்படுகிறாா்கள். ஆகவே, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகத்தால் நோய்த் தொற்று பரவி வருகிறது. அதனை தடுக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.