மழை பெய்யாததால் நீரோடைகள் வறண்டன!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை இல்லாததால் நீரோடைகள் வறண்டு காணப்படுகின்றன.
கொடைக்கானலில் தென்மேற்குப் பருவ மழை மே, ஜூன், ஜூலை மாதங்களில் நன்றாக பெய்யும். ஆனால், நிகழாண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் குறைவாகவே மழை பெய்தது.
மழை சரியாக பெய்யததால், மஞ்சளாறு, பெரியகுளம், பூம்பாறை, வெள்ளகெவி உள்ளிட்ட நீரோடைப் பகுதிகளில் நீா் வரத்தின்றி வடு காணப்படுகிறது. இதனால், வாழைகிரி, ஊத்து, வடகரைப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனா்.