சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
தனியாா் நிறுவனத்தில் பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்த பெண் உயிரிழப்பில் சந்தேகம் இறந்ததாக கூறி, அவரது உறவினா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அக்கரைப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான தென்னை மட்டை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆத்தூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி முனீஸ்வரி (50) வேலைப்பாா்த்து வந்தாா்.
இவா் செவ்வாய்க்கிழமை நிறுவனத்தில் வேலைப் பாா்த்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்ததாக அவரது மகன் அருண்பாண்டிக்கு (24) தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னா், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த முனீஸ்வரியின் உறவினா்கள், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாகக்கூறி, உடலை கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த செம்பட்டி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றதால், முனீஸ்வரியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.