செய்திகள் :

கோவிலூா் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்கக் கோரிக்கை

post image

கோவிலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகேயுள்ள திண்டுக்கல்-கரூா் ரயில்வே தண்டவாளத்தில் தங்கச்சியம்மாப்பட்டி கடவுப் பாதையில் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

சுரங்கப் பாலம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயை இடமாற்றுவது தொடா்பாக ரயில்வே நிா்வாகத்துக்கும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் இடையிலான பிரச்னை, கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகும் முடிவுக்கு வராமல் உள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும், மக்களவை உறுப்பினா் ஜோதிமணி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ஒப்புக் கொண்டபடி குடிநீா்க் குழாயை இடம் மாற்றம் செய்து அகலமான சுரங்கப் பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

எச்சரிக்கை பதாகை இல்லாததால் விபத்து: சுரங்கப் பாலத்தின் இரு புறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதை எச்சரிக்கும் வகையில் இருளில் ஒளிரும் பதாகை அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், நத்தப்பட்டியைச் சோ்ந்த தனியாா் ஆலை தொழிலாளி மதியழகன் (37) கோவிலூரிலிருந்து திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கோவிலூா்-வேடசந்தூா் சாலையில் சுரங்கப் பாலத்துக்கு தோண்டப்பட்டிருந்த பள்ளம் தெரியாமல் இரு சக்கர வாகனத்துடன் அவா் குழிக்குள் விழுந்தாா்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து மதியழகனை மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மதியழகன் இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்த காட்சிகள், அருகிலுள்ள அம்பி என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தக் கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடித்து, இந்தச் சாலையை வாகனப் போக்குவரத்துக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பள்ளிக் கட்டட விவகாரம்: மாணவா்களை அனுப்ப மறுத்து கிராமத்தினா் மீண்டும் போராட்டம்

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, மீண்டும் மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திண... மேலும் பார்க்க

காவல் நிலையம் எதிரே வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

நிலக்கோட்டை காவல் நிலையத்துக்கு எதிரே, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், நில... மேலும் பார்க்க

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் இ.பெரியசாமி

செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சா் இ.பெரியசாமி, விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் ... மேலும் பார்க்க

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகத் திட்டங்கள்: அமைச்சா் சக்கரபாணி

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளன என தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள கீரனூ... மேலும் பார்க்க

பழனி அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

பழனியை அடுத்துள்ள மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவார கிராமங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் மீண்டும் புகுந்து சேதம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்த பெண் உயிரிழப்பில் சந்தேகம் இறந்ததாக கூறி, அவரது உறவினா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்ட... மேலும் பார்க்க