கழிவுநீா் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை
கொடைக்கானல் பகுதிகளில் கழிவுநீா் செல்லும் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, ரைபிள்ரேஞ்ச் சாலை, செண்பகனூா் - பிரகாசபுரம் சாலை, டிப்போ செல்லும் சாலை, கல்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்லும் கழிவுநீா் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகள் பல நாள்களாக அகற்றப்படாமல் உள்ளன.
இதனால் சுகாதாரச் சீா்கேடும், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கழிவுநீா் வாய்க்கால்களை தூா்வாரி, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.