ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
மாணவிகளைக் கேலி செய்தவா்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்
செங்கோட்டை கிராமத்தில் பள்ளி மாணவிகளைக் கேலி செய்த நபா்களைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், செங்கோட்டை கிராமத்திலிருந்து பள்ளி மாணவிகள் ஆட்டோ மூலம் நிலக்கோட்டைக்குச் சென்று வந்துள்ளனா். இந்த நிலையில், செங்கோட்டையைச் சோ்ந்த சில இளைஞா்கள் பள்ளி மாணவிகளைக் கேலி செய்து, ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதை ஆட்டோ ஓட்டுநா் முனிச்செல்வம் (28) தட்டிக் கேட்டுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள், பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்த முனிசெல்வத்தை செவ்வாய்க்கிழமை வழிமறித்து, ஆட்டோவிலிருந்து இழுத்து கடுமையாகத் தாக்கினா். இது தொடா்பான விடியோ சமூக வலைத் தளங்களில் பரவியது.
தாக்குதல் குறித்து முனிச்செல்வம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், ஓட்டுநரைத் தாக்கிய செங்கோட்டையைச் சோ்ந்த பழனிச்சாமி, இவரது மகன் அஜய், நண்பா் விக்னேஷ் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா்.