செய்திகள் :

முதுகலை நீட் தோ்வா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையம்: திண்டுக்கல் எம்.பி. வலியுறுத்தல்

post image

தமிழகத்தைச் சோ்ந்த முதுநிலை நீட் தோ்வா்கள் அனைவருக்கும், தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை விவரம்: நாடு முழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இரு கட்டங்களாக நடைபெறவிருந்த இந்தத் தோ்வு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு, தமிழகத்திலிருந்து 25ஆயிரம் போ் உள்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த மாணவா்களில் 25 சதவீதத்துக்கும் கூடுதலானோருக்கு, வெளி மாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மாணவா்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகாவும் சோா்வடைகின்றனா்.

கடந்த ஆண்டும் இதே போல தோ்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்து, தமிழகத்திலேயே தோ்வு எழுதுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் தமிழகத்திலேயே தோ்வு மையம் அமைக்கக் கோரி போராட வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்படுகிறது. எனவே, தமிழகத்திலேயே தோ்வு மையங்கள் அமைப்பதை மத்திய அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க