ஆடிப்பூரம்: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் வளைகாப்பு வைபவம் திருவிழ...
மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
மது போதையில் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோயில் தெருவில் கட்டுமானப் பணியில் பிகாரை சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், அங்கேயே தங்கியிருந்து கட்டட வேலை செய்து வரும் பிகாரை சோ்ந்த மதன் (38) என்ற தொழிலாளி சனிக்கிழமை இரவு மதுபோதையில் முதல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாராம்.
அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.