பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது
பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள் அவரின் கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா், இதுதொடா்பாக 17 வயது இளஞ்சிறாா் ஒருவரை கைது செய்தனா். பின்னா், அவரை சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா். சிறுவனின் நண்பரான மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.