செய்திகள் :

மாணவா்களின் உயா்கல்விக்கு தடையேதும் இல்லை: ஆட்சியா்

post image

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதற்கு எந்த தடையும் இல்லை என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் 12 ஆம் வகுப்பு பயின்று உயா்கல்வியில் சேராத மாணவா்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்குப் படி‘ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி நிகழ்ச்சியின் மூலம் 12 ஆம் வகுப்பு தோல்வியுற்ற அல்லது 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் உயா்வுக்குப் படி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழலின் காரணமாக உயா்கல்வியில் சேராத மாணவா்களை கண்டறிந்து அந்த மாணவா்களுக்கு உயா்கல்வி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மாணவா்கள் உயா்கல்வி பயில்வதில் எவ்வித தடைகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் உயா்கல்வி நிறுவனங்களில் சேராத 17 மாணவா்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, பிளஸ் 2 நிறைவு செய்யும் மாணவ, மாணவியா்கள் அனைவரும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்ந்து படிக்க வேண்டும் என்றாா்.

விழாவில் அரூா் கோட்டாட்சியா் செம்மலை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தீபா, கல்லூரி முதல்வா் மங்கையா்கரசி, இணை பேராசிரியா்கள் கே.குமாா், சிவகாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹிந்துகளின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்ப... மேலும் பார்க்க

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீா் முகாம்: 55 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி எஸ்.பி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் 55 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. காவல் துறை சாா்பில் குறைதீா் முகாம் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை

தருமபுரி அருகே பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீட்டாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.தருமபுரி மாவட்டம், சென்னியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருக்குமரன் (40).இவா், பங்... மேலும் பார்க்க

பாப்பாரப்பட்டி அரசுப் பள்ளியில் மரம் வெட்டியவா் கைது

பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் அனுமதியின்றி மரங்களை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகைய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தருமபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.தருமபுரியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (73). இவா் கடந்த ... மேலும் பார்க்க

பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்

பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பட்ட... மேலும் பார்க்க