கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை
தருமபுரி அருகே பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீட்டாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், சென்னியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருக்குமரன் (40).இவா், பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளாா்.கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த திருக்குமரன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].