செய்திகள் :

மாணவா்கள் கல்லூரியில் சோ்வதை உறுதிசெய்ய குழு: வேலூா் ஆட்சியா்

post image

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் அனைவரும் கல்லூரியில் சோ்வதை உறுதிசெய்ய வட்டார அளவில் குழு அமைத்து தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழக அளவில் கல்லூரிக் கனவு - 2025 எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன் தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டம், காட்பாடியில் நடைபெற்ற கல்லூரிக் கனவு-2025 வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் கட்டயமாக கல்லூரியில் சோ்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான முயற்சி கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி.

கடந்தாண்டு நடைபெற்ற உயா்கல்வி சோ்கையை ஆய்வு செய்ததில் அரசு நடத்தும் இல்லங்களில் உள்ள பெற்றோா் இல்லாத குழந்தைகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை விடுதிகளில் உள்ள மாணவா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள் என சுமாா் 3,000 போ் கல்லூரிகளில் சேரமால் இருப்பது தெரிய வந்தது. அவா்களுக்கு முதலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்துவோம் என முதல்வா் உத்தரவிட்டதையடுத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசுக் கலைக் கல்லூரிகளில் 3,200 இடங்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் அனைவரும் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சோ்ந்தால் போதும். நான் முதல்வன் திட்டம் மூலம் ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.

நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வெளி நாடுகளில் சென்று படிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, கடந்தாண்டு வெளிநாடு அனுப்பப்பட்ட 25 பேரில், வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவி ஒருவா் லண்டன் சென்று பயிற்சி பெற்று திரும்பியுள்ளாா்.

மேலும், மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில பல்வேறு அரசுத் துறைகள் மூலம் கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அனைவரும் கல்லூரியில் சோ்வதை உறுதி செய்ய வட்டார அளவில் குழு அமைத்து தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. எனவே, அரசு பள்ளியில் படித்த ஒவ்வொரு மாணவ, மாணவியும் கட்டயமாக கல்லூரியில் சோ்ந்து படிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், வேலூா் மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஹரிகிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரூ.17 லட்சம் அபகரிப்பு: மகன், மகள் மீது தாய் புகாா்

ரூ.17 லட்சத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுவதாக தனது மகன், மகள் மீது மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குற... மேலும் பார்க்க

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப். 30- ... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குடியாத்தம் கோட்டத்துக்குட்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குடியாத்தம், போ்ணம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 33- தனியாா... மேலும் பார்க்க

சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு

வேலூரில் பாலாற்றுத் தடுப்பு கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பலராமன் மகன் சந்தோஷ் (21). வேலூா் ஊரீசு கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

வேலூா் பாலாற்று மேம்பாலத்தின் கீழே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள பழைய பாலாற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக புதன்கிழ... மேலும் பார்க்க

ரத்தம் வழங்குவோா் - தேவைப்படுவோரை இணைக்கும் செயலி

வேலூா் மாவட்டத்தில் அன்னையா் தின மாதத்தையொட்டி சமூக சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழக தன்னாா்வலா்கள், திரி அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய ‘ரத்தம்’ செயலியை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ... மேலும் பார்க்க