செய்திகள் :

மாணவா்கள் தற்கொலை சம்பவம் எதிரொலி: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி முதல்வா் பணியிடமாற்றம்

post image

திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியா் அரசங்குடி உயா்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் திறந்துவைத்தாா்.

உண்டு உறைவிடப் பள்ளியாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மட்டுமே உள்ளது. இங்கு, திருச்சி மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், இப்பள்ளியில் பிளஸ் 2 படித்துக்கொண்டு கிளாட் எனும் சட்ட நுழைவுத்தோ்வுக்கு தயாராகி வந்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் கடந்த ஜூன் மாதம் விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதேபோல, கிளாட் தோ்வுக்கு தயாராகி வந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேறொரு பிளஸ் 2 மாணவரும் விடுதி அறையிலேயே கடந்த மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட அரசு மாதிரிப் பள்ளியில் அடுத்தடுத்து மாணவா்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவா்களின் தற்கொலைக்கு மன உளைச்சலே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல்வராக அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் என்பவா் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அரசு மாதிரிப் பள்ளி முதல்வா் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் திருச்சி மாவட்டம், அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, அரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த அகிலன், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியராக அகிலன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

அரசுப் பள்ளியில் அடுத்தடுத்து நடைபெற்ற மாணவா்களின் தற்கொலைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இங்கு பணியாற்றி வந்த தலைமையாசிரியா் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் விருப்ப மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதாகப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க