திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது
திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். இங்கு, திருச்சி கே.கே.நகா் அமலபுரம் காலனியைச் சோ்ந்த தமிழ் (52) என்பவா் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
கடந்த 13-ஆம் தேதி கல்லூரி ஆய்வகத்தில் செயல்பாடுகளை முடித்துவிட்டு வெளியே சென்ற அந்த மாணவியை, பேராசிரியா் தமிழ் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து அந்த மாணவி, கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோா் மணிகண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அங்கிருந்து திருவெறும்பூா் மகளிா் காவல் நிலையத்துக்கு புகாரை போலீஸாா் அனுப்பிவைத்தனா். இதன்பேரில், திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பேராசிரியா் தமிழை வியாழக்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, தமிழை திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.