'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா
தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவிலான தோ்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதன் தோ்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அதில், சூளகிரி ஒன்றியத்தில் மாதரசனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, கொத்தூா் ஆகிய பள்ளிகளிலிருந்து 5 மாணவா்கள் தோ்வாயினா். இம்மாணவா்கள் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை பெறுவா். வெற்றிபெற்ற மாணவா்களை ஆசிரியா்களும், வட்டாரக் கல்வி அலுவலா்களும் பாராட்டி, பரிசுகள் வழங்கி கௌரவித்தனா்.
மாதரசனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெற்றிபெற்ற மாணவி ஜெயஸ்ரீக்கு வட்டாரக் கல்வி அலுவலா் மாதேஷ், கேடயம், பதக்கம், நினைவுப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சாத்தாயி, பயிற்சி அளித்த ஆசிரியா்கள் யோக ஸ்ரீ, சத்தியபாவை, பானுமதி, ஜெரின்தாஜ் ஆகியோா் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனா்.