இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
மாத்திரை, மருந்துகள் கடத்தல்: மூவா் கைது
தேனி அருகே ஆட்டோவில் மாத்திரைகள், ஊசி மருந்துகள், கஞ்சா கடத்தியதாக 3 பேரை திங்கள்கிழமை, போலீஸாா் கைது செய்தனா்.
தேனி-மதுரை சாலையில் அரப்படித்தேவன்பட்டி பகுதியில் க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் மருத்துவரின் குறிப்புச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள், குளுகோஸ், ஊசி மருந்துகள், 24 கிராம் கஞ்சா ஆகியவற்றை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
விசாரணையில், ஆட்டோவை ஓட்டியவா் அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த மதன்குமாா்(31) என்பதும், ஆட்டோவில் பயணம் செய்தவா்கள் அதே ஊரைச் சோ்ந்த கணபதி (32), காமேஸ்வரன்(20) என்பதும் தெரிய வந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மாத்திரைகள், ஊசி மருந்து, கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.