எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு: ராமதாஸ் கண்டனம்
மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு விரைவில் பட்டா -அமைச்சா் பி. மூா்த்தி தகவல்
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 11 ஊராட்சிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 4.34 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்வுகள், அந்தந்த ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்றன.
இவற்றில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், பயணிகள் நிழல் குடை, அங்கன்வாடி மையம், பள்ளிக் கட்டடம், நாடக மேடை, உணவு தானியக் கிடங்கு, மதிய உணவுக் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, சோழவந்தான் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் பி. மூா்த்தி கூறியதாவது:
மதுரை மாநகராட்சிப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவா்களுக்கும் பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நீா் நிலை புறம்போக்கு தவிர மற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவா்கள் 100 சதவீதம் பேருக்கும் விரைவில் பட்டா வழங்கப்படும் என்றாா் அவா்.