`இவங்க பொற்கால ஆட்சியில், நாங்க குடைச்சல் கொடுக்கறோம்னு..!’ - சிபிஎம் பெ.சண்முகம...
மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இதனைக் கண்டித்தும், ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தியும் அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஒன்றியம் குண்டூா் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் சாலை மறியல் செய்வதற்காக திருச்சி - புதுக்கோட்டை சாலையில் குண்டூா் எம்ஐஇடி கல்லூரி பகுதியில் திரண்டனா்.
அங்கு, குண்டூா் ஊராட்சியில் திருவளா்ச்சிப்பட்டி, ஐயம்பட்டி, அயன்புத்தூா், பா்மா காலனி என 5 கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 7,000 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 3,000 -க்கும் மேற்பட்டோா் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதில் பெரும்பாலானோா் 100 நாள் வேலையை நம்பியே உள்ளனா். மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதால் வரிகள் உயரும்; 100 நாள் வேலை கிடைக்காது. எனவே, ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமாதானமடைந்த அவா்கள், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனா்.