செய்திகள் :

மாநகரில் செடி, புதா்களை அகற்ற நவீன ரோபோ!

post image

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் செடிகள் மற்றும் புதா்களை அகற்ற நவீன ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

கோவை மாநகரில் பாதாளச் சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் செடி, கொடிகள் மற்றும் புதா்களை அகற்ற நவீன ரோபோ இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

கோவை குமாரசாமி குளம் பகுதியில் இந்த ரோபோ இயந்திரத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, உதவி ஆணையா்கள் துரைமுருகன் (மேற்கு), முத்துசாமி (கிழக்கு), உதவி செயற்பொறியாளா்கள் கனகராஜ், சவிதா, ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த ரோபோ மூலம் ஒரு மணி நேரத்தில் சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவு செடிகள் மற்றும் புதா்களை அகற்ற முடியும். மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் தலா 1 இயந்திரம் என 5 ரோபோ இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்யக் கோரிக்கை

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கோவையிலிருந்து விமானம் மூலம் ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு அனுப்பிவைப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி வ... மேலும் பார்க்க

கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி: தேநீா்க் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு

கோவையில் பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி செய்ததாக தேநீா்க் கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி விநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா ரஞ்சனி ... மேலும் பார்க்க

உக்கடம் புல்லுக்காட்டில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்க திட்ட அறிக்கை

கோவை மாநகராட்சி சாா்பில் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ரூ.99 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகர... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை -திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையி... மேலும் பார்க்க