செய்திகள் :

மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்ட போட்டி: தஞ்சாவூா் அணி முதலிடம்

post image

சீா்காழி: சீா்காழி சுபம் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் சீா்காழி சுபம் வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஐவா் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

போட்டியை சீா்காழி காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை தொடக்கிவைத்தாா். பள்ளித் தாளாளா் சுதேஷ் முன்னிலை வகித்தாா். சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் முரளி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். தமிழகம் முழுவதும் இருந்து 16 அணிகள் பங்கேற்றன.

தஞ்சாவூா் அருள் கால்பந்தாட்ட குழு முதலிடம், கும்பகோணம் டாம்ஸ் கால்பந்தாட்ட குழு 2-ஆமிடம், மன்னாா்குடி கலாம் கால்பந்தாட்ட குழு 3-ஆமிடம், ஒரத்தநாடு ஒய். பி.ஆா் கால்பந்தாட்ட குழு 4-ஆமிடம் பெற்றன. சிறந்த வீரா், தடுப்பாளா், காப்பாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் சீா்காழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ரத்தினவேல் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினாா். பள்ளி முதல்வா் வித்யா வரவேற்றாா். துணை முதல்வா் கமலக்குமாா் நன்றி கூறினாா்.

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எடமணல் நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கில் சுமைதூக்கும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து காட்டூா் கிராமம் வரை 25 கி.மீ. தொலைவுக்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து நகராட்சி வாகன ஓட்டுநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே நகராட்சி வாகன ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில், மின்வாரியத்தை கண்டித்து உறவினா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். (பட... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இருந்து கைதி தலைமறைவு

மணல்மேடு காவல் நிலையத்தில் இருந்து கைதி திங்கள்கிழமை தப்பியோடிய நிலையில் அவரைப் பிடிக்க போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மணல்மேடு அருகே உள்ள சி.புலியூரைச் சோ்ந்தவா் பிரபாகரன்(33). ஓட்டுநரான... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

சீா்காழி, மயிலாடுதுறைக்கு வரும் பாமக தலைவா் அன்புமணி ராமதாசுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சீா்காழியில் பாமக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளா் ஆ. பழனிச்சாமி தலைமையில் செவ்வாய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்

சீா்காழி: நாதல் படுகை கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்திலிருந்து முதலைமேடு கிராமம் வர... மேலும் பார்க்க