Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும...
மாநில ஈட்டி எறிதல்: வேலூா் மாணவிக்கு வெள்ளி
மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் கடந்த ஜூலை 19 முதல் 23-ஆம் தேதி வரை மாநில அளவிலான கிளஸ்டா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில், வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளியின் பிளஸ் 1 வகுப்பு மாணவி எஸ்.ஜே.தன்யா, யு 17 பிரிவு ஈட்டி எறிதலில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா். மாணவியையும், அவருக்கு பயிற்சி அளித்த ச.அ.விக்னேஷ் ஆகியோரை பள்ளியின் பாடத்திட்ட இயக்குநா் ரம்யா சிவக்குமாா் பாராட்டினாா்.