செய்திகள் :

மாநில கலைத் திருவிழா: சிவகங்கையிலிருந்து 375 போ் பங்கேற்பு

post image

மாநில அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 375 மாணவ, மாணவிகள் பங்கேற்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து 9 பேருந்துகளில் மாணவ, மாணவிகள் புறப்பட்டுச் சென்றனா். இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்து ஆட்சியா் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் 2024-25 -ஆம் ஆண்டுக்கான கலைத்திருவிழா போட்டிகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு நடத்தப்பட்டது. மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த ஆண்டு நவ.12 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றன.

இதில் முதலிடம் பெற்ற பெற்ற 375 மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா். இதற்காக இந்த மாணவா்கள் 9 பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 3) நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 144 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் 131 பேரும், ஜன. 4-இல் கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 100 பேரும் பங்கேற்கின்றனா்.

மாணவா்களுடன் ஆசிரியா்கள், பெற்றோா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் செல்கின்றனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் போக்குவரத்து, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) மாரிமுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித்திட்ட அலுவலா் பீட்டா் லெமாயு ஆகியோா் கலந்து கொண்டனா்.

கானாடுகாத்தான், உப்பூா் பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சிவகங்கை புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவீன் உமேஷ் டோங்கரே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஷ் ராவத்... மேலும் பார்க்க

ப.சிதம்பரம் ரூ.12 கோடியில் கட்டிய வளா் தமிழ் நூலகம் ஜன.21-இல் திறப்பு!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய வளா் தமிழ் நூலகம் வருகிற 21-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. செட்டிநாடு கட்டடக்கலை... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடத்துவோா் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவி... மேலும் பார்க்க

ரெகுநாதபட்டியில் வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே ரெகுநாதபட்டியில் வட மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. வட்ட வடிவத் த... மேலும் பார்க்க

பூவந்தியில் மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே பூவந்தியில் திமுக இளைஞரணி சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூவந்தி-சிவகங்கை சாலையில் பெரிய மாடு, சின்னமா... மேலும் பார்க்க