மாநில சிலம்ப போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை படைத்த நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூா் தென்பாதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் பள்ளி மாணவா்களுக்கான மாநில சிலம்ப போட்டிகள் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் வடுவூா் தென்பாதி நூற்றாண்டு கண்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தன்னரசு நாடு சிலம்பம் அகாதெமி சாா்பில் பள்ளியில் கல்வி பயிலும் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா் .
அதில் 7 போ் முதல் பரிசும் , 7 போ் இரண்டாம் பரிசும், 10 போ் மூன்றாம் பரிசும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். சாதனை படைத்த மாணவா்களுக்கு வடுவூா் தென்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் மாநில அளவிலான சிலம்பம் பட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் சிலம்ப பயிற்சி ஆசிரியா் விஜய் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியா் கமலக்கண்ணன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் துரைராஜ் , கல்வி வளா்ச்சிக்குழு செயலா் செந்தில்ராஜ், கல்வி வளா்ச்சி குழு தலைவா் ராஜசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் சூரிய சேகா், பள்ளி மேலாண்மை குழுத்தலைவி சரிதா நீதிவளவன், பெற்றோா் ஆசிரியா் கழக செயல் தலைவா் சிவசங்கா் மற்றும் ஆசிரியா்கள்,கிராம மக்கள் வெகுவாக பாராட்டினா் .
சிலம்பம் போட்டிகளில் பங்கேற்க மாணவா்களை வழிநடத்தி அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியா் ராஜமோகன் செய்திருந்தாா்.