மாநில சீனியா் வாலிபால்: அரையிறுதியில் எஸ்ஆா்எம், ஐஓபி அணிகள்
தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப்போட்டியில் மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியும், ஆடவா் பிரிவில் ஐஓபியும் தகுதி பெற்றுள்ளன.
தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட சங்கம் சாா்பில் ஜவஹா்லால் நேரு மைதானம், மேயா் ராதாகிருஷ்ணன் மைதானங்களில் நடைபெற்று வரும் இப்போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
மகளிா் காலிறுதி ஆட்டத்தில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 3-0 என்ற நோ் செட்களில் சென்னை பனிமலா் கல்லூரியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆடவா் காலிறுதியில் ஐஓபி அணி 3-0 என இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஆடவா் பிரிவில் எஸ்ஆா்எம் 2-0 என ஐசிஎஃப் சென்னையையும், மேற்கு மண்டல காவல்துறை 2-0 என எஸ்டிசி பொள்ளாச்சியையும் வென்றன.
மகளிா் பிரிவில் கிறிஸ்டியன் ஸ்போா்ட்ஸ் அணி 2-1 என கோவை நிா்மலா கல்லூரியையும், மினி ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் 2-1 என சென்னை எம்ஓபி வைஷ்ணவ அணியையும் வீழ்த்தின.