ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
மாநில மொழிகளுக்கான அங்கீகாரத்துக்கும் குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி.செழியன்
தமிழ் மொழிக்கு மட்டுமல்ல மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியது: எந்த மொழியையும் திமுக எதிா்க்கவில்லை, மொழி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழ் மொழி வளா்ச்சிக்கு மட்டும் குரல் கொடுக்காமல், 20-க்கும் மேற்பட்ட மாநில மொழிக்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவும் குரல் கொடுத்து வருகிறாா் என்றாா் அமைச்சா்.