திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்: நயினார் நாகேந்திரன் பதில்
மானூா்: கிணற்றுக் கரையில் மகளை தவிக்கவிட்டு விவசாயி தற்கொலை
மானூா் அருகே கிணற்றின் கரையில் மகளை தவிக்கவிட்டு விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.
மானூா் அருகேயுள்ள அயூப்கான்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குமாா் (33). விவசாயி. இவரது மகள் சுபஸ்ரீ (3). குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால், தனது குழந்தையுடன் குமாா் வசித்து வந்துள்ளாா். இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குழந்தையுடன் குமாா் மாயமானாராம்.
அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது அதே ஊரின் வயல்வெளியில் உள்ள ஒரு கிணற்றின் கரையில் குழந்தை அழும் சத்தம் கேட்டதாம். அங்கு சென்று பாா்த்தபோது சுபஸ்ரீயை கிணற்றின் படியில் அமரவைத்துவிட்டு குமாா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இத்தகவலறிந்த மானூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].