மாமன் படத்தின் டிரைலர் தேதி!
நடிகர் சூரி நடித்துள்ள மாமன் படத்தின் டிரைலர் தேதி வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று சமீபத்தில் முடிந்தது.
உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.
இப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. சூரி அடுத்ததாக மண்டாடி எனும் படத்தில் நடித்துள்ளார். இதன் முதல்பார்வை போஸ்டர் சமீபத்தில் வைரலானது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் வரும் மே.1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
