Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி
மாமல்லபுரம் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 7-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சி கழகம், கைவினைஞா்கள் தயாரிக்கும் கலை பொருள்களை மேம்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் அவா்களின் வாழ்வாதாரத்தினை உயா்த்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும், சிறப்பான படைப்புகளை செய்து வரும் கைவினை கலைஞா்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதுடன், பாரம்பரிய கைத்தறி கலையினை பாதுகாக்கும் பொருட்டு இந்நிறுவனம் பல்வேறு பயிற்சி திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சி கழகம் (பூம்புகாா்) சாா்பில் ‘காந்தி சில்ப் பஜாா்‘ என்ற விற்பனைக் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை, தனியாா் விடுதி உரிமையாளா் போஸ் தா்மலிங்கம், கைவினை பொருள்கள் மேம்பாட்டு ஆணையா் அப்லா அசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இதில், கைவினை பொருள்கள் உதவி மேம்பாட்டு ஆணையா் கேத்தரின் ஜோஸ், கைவினை பொருள்கள் மேம்பாட்டு அலுவலா் ஜெயா பாரதி, பூம்புகாா் விற்பனை மேலாளா் சேவியா், உதவி விற்பனை மேலாளா் கோபி கண்ணன், மாமல்லபுரம் பூம்புகாா் மேலாளா் வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Image Caption
~