England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா், புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள நரிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (38). இவரது மகள் வேடியம்மாளின் (19) கணவா் ஐயப்பன் (30). மது பழக்கத்துக்கு அடிமையான இவா் அடிக்கடி மனைவியுடன் தகராறு ஈடுபடுவாறாம்.
இந்த நிலையில், மது போதையில் வீட்டிற்கு வந்த ஐயப்பன் தனது மனைவி மாமியாரிடம் தகராறு ஈடுபட்டாா், அப்போது ஆத்திரம் அடைந்த, ஐயப்பன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை கத்தியால் குத்தியுள்ளாா்.
வயிற்றில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமியை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டினம் போலீசாா் வழக்கு பதிந்து, ஐயப்பனை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.