செய்திகள் :

மார்ஷலில் கார்த்திக்கு வில்லனாகும் ஆதி?

post image

நடிகர் கார்த்தியின் ”மார்ஷல்” திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ஆதி பினிசெட்டி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகரும், இயக்குநருமான தமிழ்-ன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மார்ஷல்”. நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், நடிகர்கள் சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கென் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் புதுமையான போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கப்பல் ஓட்டும் கேங்ஸ்டர்களின் கதை என்று கூறப்படும், இந்தப் புதிய படத்தின் வில்லனாக நடிகர் ஆதி பினிசெட்டி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இந்தப் படம் இரு பாகங்களாக வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவினர் முதலில் நடிகர் நிவின் பாலியை அனுகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்..! தனக்குத்தானே போட்டியாக மாறிய பிரதீப்!

Reports have emerged that actor Aadhi Pinichetty will play the villain in actor Karthi's film "Marshal".

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

கூலியில் இடம்பெற்ற மோனிகா பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘மோனிகா’ பாடல் ஒரு மாதத்திற்கு முன் வெளியானபோதே... மேலும் பார்க்க

மலரும்... ஆஷிகா ரங்கநாத்!

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு... மேலும் பார்க்க

கில்லர் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டு... மேலும் பார்க்க

ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் போஸ்டரை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எ... மேலும் பார்க்க