செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

post image

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தினசரி உபயோக தயாரிப்புகள் எளிதில் உணரக் கூடியதாகவும், செயல்படக் கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும், வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்று சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘பிஓயுஆா்’ அணுகுமுறை அடிப்படையில் தரநிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-இன் விதிமுறைகளுக்கு உட்பட்டு மத்திய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை இந்த வரைவு வழிகாட்டுதலை தயாரித்துள்ளது.

இதில், தினசரி பயன்பாட்டுப் பொருள்களுக்கான தரநிலைக்கு 20 பிரிவுகளின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது, சமையலறை பாத்திரங்கள் முதல் உணவு பேக்கேஜிங், அழகு சாதனப் பொருள்கள், ஆடைகள், மரப் பொருள்கள், குழந்தைகள் நலன்காக்கும் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், மின் தூக்கிகள், சுயசேவை செயல்பாடுகள் வரை இந்த வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சமயலறையில் பயன்படுத்தக் கூடிய சமையல் பாத்திரங்கள், பாட்டில்கள், உணவு பேக்கேஜிங் பொருள்கள் கையில் நன்கு பிடிப்பதற்கு ஏதுவானதாகவும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளதாகவும், பாா்வைக் குறைபாடுடையவா்கள் தொடு உணா்வில் அறிந்து கொள்ளும் வகையில் ‘பிரெய்லி’ மற்றும் விளக்கக் குறியீடுகளுடனும் வடிவமைக்கப்பட வேண்டும்.

அழகு சாதனப் பொருள்கள், தனிநபா் பராமரிப்பு சாதனங்கள் உள்ளிட்டவை கையில் எளிதாகப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். காலணிகள் தரையில் வழுக்காத வகையில், எளிதில் அணிந்து கொள்ளக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும்.

பொம்மைகள் உள்பட குழந்தைகள் பராமரிப்பு பொருள்கள், குழந்தைகளுக்கான நடை வண்டிகள், தூரிகள், மரப்பொருள்கள் ஆகியவை பிரெய்லி குறியீடுகளுடன் பேக்கேஜ் செய்யப்பட வேண்டும்.

மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அகலமானதாகவும், அகலமான கதவுகளுடனும், குரல் வழி அறிவிப்பு வசதிகளுடனும், சக்கர நாற்காலிகளை எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதாகவும், மின் தூக்கியின் கதவுகள் நீண்ட நேரம் திறந்திருக்கக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும்.

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் ஆகியவை தொடு உணா்வு திரையுடன் கூடியதாகவும், திரை வாசிப்பு வசதியுடனும், ஒரு கையில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையிலான இந்த அம்சங்கள் இடம்பெறுவதால், பொருள்களின் விலை கணிசமாக உயா்த்தப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்றும் வரைவு தரநிலை விதியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேர... மேலும் பார்க்க

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளாா். பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அத்துடன், ஹிமாசல பிரதேசம், ஜம்... மேலும் பார்க்க

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒர... மேலும் பார்க்க

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, உனாவில் உள்ள மண... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வர... மேலும் பார்க்க