செய்திகள் :

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

post image

பெரம்பலூா் மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் திங்கள்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா சென்றனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சுற்றுலா வாகனத்தை, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

இம் மாவட்டத்தில் செவித்திறன் குறையுடையவா்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய மாணவா்கள் மற்றும் மனவளா்ச்சிக் குன்றியோா்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய மாணவா்கள் என 30 மாற்றுத்திறனாளி மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள், 6 சிறப்பாசிரியா்கள் என மொத்தம் 59 போ் திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கம், பறவைகள் பூங்கா, வண்ணத்துப் பூச்சி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வ. சீனிவாசன், உதவி சுற்றுலா அலுவலா் தாமரை, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், சுமாா் 1 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின. பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி: பெரம்பலூரில் 7,905 மாணவா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வை 7,905 மாணவ, மாணவிகள் எழுதினா். பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தோ்வை 141 பள்ளிகளைச் சோ்ந்த 4,272 மாணவா்கள், 3, 775 மாணவிகள் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நடமாடும் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் அறுவடைக் காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நீச்சல் பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், 5 கட்டமாக நடைபெறும் நீச்சல் பயிற்சி முகாமில் பங்கேற்க பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளாா். இ... மேலும் பார்க்க

உலக தண்ணீா் தினத்தையொட்டி நாளை கிராம சபைக்கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க