அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
பெரம்பலூரில் நீச்சல் பயிற்சி பெற அழைப்பு
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், 5 கட்டமாக நடைபெறும் நீச்சல் பயிற்சி முகாமில் பங்கேற்க பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் பெரம்பலூா் மாவட்ட விளையாட்டரங்கிலுள்ள நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும், நீச்சல் வீரா்களின் பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நீந்தக் கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டுக்கான சிறப்பு பயிற்சி முகாம் 5 கட்டமாக நடைபெற உள்ளது.
இம் முகாமில் பங்கேற்போருக்கு 12 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன்படி முதல் கட்டமாக ஏப். 1 முதல் 13 வரையிலும், 2 ஆம் கட்டமாக 15 முதல் 27 வரையிலும், 3 ஆம் கட்டமாக 29 முதல் மே 11 வரையிலும், 4 ஆம் கட்டமாக மே 13 முதல் 25 வரையிலும், 5 ஆம் கட்டமாக 27 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக் கட்டணமாக ரூ. 1,500 மற்றும் 18 சத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். பயிற்சி முகாமில் பங்கேற்று நிறைவு செய்பவா்களுக்குச் சான்றிதழ் அளிக்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் பதிய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-299266, 74017 03516, 88704 39645 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம்.