கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்த கோரிக்கை
விழுப்புரம்: தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த
சங்கத்தின் மாநாட்டுப் பொதுக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலா் கிருஷ்ணமூா்த்தி, வரவேற்புக் குழு செயலா் கண்ணப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் வில்சன், பொதுச் செயலா் ஜான்சிராணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ஆந்திர மாநில அரசு உயா்த்தி வழங்குவது போன்று ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அரசு மற்றும் தனியாா்துறைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய நிா்வாகிகள் முருகன், வேலுமணி, மும்மூா்த்தி, மணிகண்டன், புஷ்பா, குறளரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் ஒன்றியத் துணைச் செயலா் சின்னையன் நன்றி கூறினாா்.