மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள பாா்வைத்திறன், காது குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை வழங்கப்பட உள்ளது.
வீட்டில் இருந்து பணிபுரியும் இடங்களுக்குச் செல்லவும், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்து சலுகை அட்டை பெறுவதற்கு வீட்டின் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று ஜ்ஜ்ஜ்.ற்ய்.ங்ள்ங்ஸ்ஹண் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து, ஓராண்டுக்கான இலவச பேருந்து சலுகை பயண அட்டை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.