மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலா் ஏ.அரபுமுகமது, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் மாநகரச் செயலா் சேசுராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராகவும், அவா் பதவி விலகக் கோரியும் ஆா்ப்பாட்டத்தின் போது முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா்கள் கே. பிரபாகரன் (சிபிஎம்), ஏபி. மணிகண்டன் (சிபிஐ) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.