மாா்த்தாண்டம் அருகே நிதி நிறுவன ஊழியா் மயங்கி விழுந்து பலி
மாா்த்தாண்டம் அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் பணியில் இருந்த ஊழியா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
தகக்லை அருகேயுள்ள கோழிப்போா்விளையைச் சோ்ந்தவா் பென்சாம் ஸ்டாலின் டேவிட் (41). இவா் மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா். வியாழக்கிழமை பணியில் இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். சக ஊழியா்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.